இலங்­கையின் மனித உரிமை  நிலைமை  தொடர்­பான  பல்­வேறு  சர்ச்­சை­யான அறி­விப்­புக்கள் சல­ச­லப்­பான கூட்­டங்­க­ளுடன்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின்  36 ஆவது கூட்டத்  தொடர் நேற்­றுடன்  நிறை­வ­டைந்­தது.  

இலங்கை தொடர்­பான விவா­தங்கள் எதுவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில்  இம்­முறை கூட்டத்   தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்­பெ­றா­வி­டினும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற  முறை யில் பல்­வேறு அறி­விப்­புகள் இடம்­பெற்­ற­துடன்    இலங்கை   தொடர்­பான  15 க்கும்  மேற்­பட்ட  உப­குழுக் கூட்­டங்­களும் நடை­பெற்­றன. 

முதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய  ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன் இலங்கை  தொடர்பில்  அதி­ருப்தி  வெ ளியிட்­டி­ருந்தார்.  

இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர்  தொடர்­பான  அலு­வ­ல­கத்தை  உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன்.  அது­மட்­டு­மன்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும்  வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று  ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன்  தெரி­வித்­தி­ருந்தார். 

மேலும் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள   காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும்.  பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை  உட­ன­டி­யாக  தீர்க்­க­வேண்டும்.  இந்த  வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக  தேங்­கிக்­கி­டக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும்   அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும்   சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும்   எனவும்  அல் ஹுசேன்   வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். 

அத்­துடன் இலங்­கை­யா­னது  சர்­வ­தேச  மனி­தா­பி­மான சட்டம்,  மற்றும் சர்­வ­தேச  மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில்  நம்­ப­க­ர­மான  பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும்  என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

இதே­வேளை  இலங்கை   தொடர்­பாக  15 க்கும்  மேற்­பட்ட  உப­குழுக் கூட்­டங்­களும்    இம்­முறை  ஜெனிவா கூட்டத் தொடரில்  நடை­பெற்­றன.   இந்தக் கூட்­டங்­கங்­களில் இலங்­கையின் சார்­பிலும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் சார்­பிலும்  பிர­தி­நி­திகள் உரை­யாற்­றி­யி­ருந்­தனர்.  

மேலும்  தமி­ழ­கத்தின்  ம.தி.மு.க. கட்­சியின்  பிர­தி­நி­தி­யான   வைகோவும்  இம்­முறை  ஜெனி­வா­வுக்கு சென்று   உப­குழுக் கூட்­டங்­களில்   இலங்கை  தொடர்பாக உரையாற்றியிருந்தார்.   இது இவ்வாறு  இருக்க  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  37 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.  இதன்போது இலங்கை  தொடர்பாக   நான்கு அல்லது ஐந்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.