இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதுடன் புகையிலை பொருட்கள் மற்றும் மதுவை பாவிப்பது அதிகரித்துவிட்டது.
இதன் காரணமாக அவர்கள் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள பிரத்யேக உறுப்புகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறது. இவர்களுக்கு தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட கதிரியக்க சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஓரல் கேன்சர் - லொரியென்ஜில் கேன்சர்- ஹைப்போபார்ஜினியல் கேன்சர்- நாஸோபார்ஜீனியல் கேன்கர் - என கழுத்து மற்றும் தலைப்பகுதியில் உள்ள சிக்கலான மற்றும் பிரத்தியேக உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது.
பதினைந்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் குரல் மாற்றம், விழுங்குவதில் சிரமம், தொண்டை அசௌகரியம், தொண்டை வலி, காது வலி, கழுத்தில் கட்டி ..போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... அவை புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதில் சிலருக்கு தொண்டையின் கீழ் பகுதியில் குரல்வளை நாணிற்கு பின்பகுதியில் அரிதாக ஹைப்போபார்ஜீனியல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய புற்றுநோய் பாதிப்பு மூன்று வகையினதாக வகைப்படுத்தப்பட்டு... அதனை பிரத்யேக பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். புகை மற்றும் மது ஆகிய போதை பொருட்களின் பாவனை காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு, வைரஸ் தொற்று, மரபணு கோளாறுகள் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இதற்கு தற்போது நவீன மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக கதிர்வீச்சு சிகிச்சை மூலம் 30க்கும் மேற்பட்ட அமர்வுகளில் சிகிச்சை அளித்து நிவாரணத்தை வழங்கி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் வைத்தீஸ்வரன் தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM