உலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு மணி நேரத்தினுள் பயணிக்கக் கூடிய புத்தம் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக, பிரபல ரொக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’இன் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ரொக்கெட் மணிக்கு 27 ஆயிரம் கிலோமீற்றரில் பறக்கும் என்றும், இதன்மூலம் லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில் பறக்கமுடியும் என்றும், ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை வெறும் ஒரு மணிநேரத்தினுள் கொண்டுவர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பூமியில் இருந்து செவ்வாய்க்கு மக்கள் பயணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த மஸ்க், இதற்குத் தேவையான விண்ணோடங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தனது நிறுவனம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கான காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இதோ அந்தக் காணொளி, உங்களுக்காக!