கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது.

மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் - குறிப்பாக ஆண்கள் - பொம்மையின் உடல் பாகங்களைத் தொட்டும், தடவியும், அழுத்தியும் சேட்டை விட்டதால் சமந்தாவுக்கு சேதாரமானதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது திருத்த வேலைகளுக்காக எடுத்துச் சென்றிருக்கும் பொம்மையைத் திரும்பவும் கண்காட்சிகளில் வைக்கும் எண்ணமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.