முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கலுக்கான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!

23 Jun, 2026 | 04:55 PM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழாவிற்கான புனித தீர்த்தமெடுக்கும் நிகழ்வு  ஜூன் 17 ஆம் திகதி இரவு பாரம்பரிய மரபுவழிச் சடங்குகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

வருடாந்தப் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆலயத்தில் மாலை வேளையில் தீர்த்தமெடுப்பதற்கான விசேட பூஜை மற்றும் மரபுவழிச் சடங்குகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அடியவர்கள் கும்பம், மடைப்பண்டங்கள் மற்றும் தீர்த்தக்குடங்களுடன் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பாதை வழியாக வட்டுவாகல் கடற்கரையை சென்றடைந்தனர்.

அங்கு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மற்றும் சமயச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், வருடாந்தப் பொங்கல் விழாவிற்கான புனித தீர்த்தம் வட்டுவாகல் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.

பின்னர் புனித தீர்த்தம் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு பாதுகாப்பாக ஆலய வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கடல் தீர்த்தம் வட்டுவாகல் சப்தகன்னியருக்கு தீபமேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த புனித தீர்த்தம் பயன்படுத்தப்பட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒருவார காலத்திற்கு தீபம் ஏற்றப்படவுள்ளதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்தப் பொங்கல் விழாவும் பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17