வவுனியா கல்மடு பகுதியை சேர்ந்த முத்துலிங்கம் கிறிஸ்ரிகா எனும் 11மாத குழந்தை காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் இரவு 11மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இக்குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் திடீர் காய்ச்சல் காரணமாக வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில்  உள்ள தனியார் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.