கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் யோகா தின விழா

23 Jun, 2026 | 12:20 PM
image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

இதன்போது, இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனப் போட்டியில் (1st World Yogasana Championship – 2026) இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஊவா மாகாண கூட்டமைப்பின் ஊடாக பங்கேற்று வெற்றியீட்டிய R. முகேஷ்கர், K. லதுர்சன், S. பிரதீஷ், G. வகீஷன், T. தயதீக்சன், R. ரித்திகா ஆகிய மாணவ, மாணவிகள் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினரால் பாராட்டப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திய கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான  A. ராஜ்குமார், இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தின் ஊவா மாகாண கூட்டமைப்பின் தலைவரான V. யோகச்சந்திரன் மற்றும் செயலாளரான P. யசோபிரசாத் ஆகியோர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44