இலங்கை வர்த்தக சபை - பெனெலக்ஸ் இலங்கை வணிகக் கவுன்சில் இருதரப்பு புரிந்துணர்வு

22 Jun, 2026 | 05:43 PM
image

இலங்கை பெனெலக்ஸ் வணிக கவுன்சில் (Sri Lanka Benelux Business Council) மற்றும்  இலங்கை வர்த்தக சபையுடன் இணைந்து, ஜூன் 18 ஆம் திகதி   கொழும்பு ஹில்டன் ரெசிடென்ஸில் வணிக மன்றம் மற்றும் B2B வணிக வலையமைப்பு அமர்வை நடத்தியது.

இந்த நிகழ்வில் பெல்ஜியம் மற்றும் லக்ஸ்சம் பேர்க் நாடுகளைச் சேர்ந்த 19 வணிக பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன் மூலம் இலங்கை மற்றும் பெனெலக்ஸ் பிராந்தியத்திற்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பெல்ஜிய தூதுவர் டிடியர் வாண்டர்ஹசெல்ட் (Didier Vanderhasselt)  மற்றும் பெல்ஜியம், லக்ஸ்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவர் சந்தன வீரசேன ஆகியோர் தமது உரைகளில்  இலங்கை மற்றும் பெல்ஜியத்திற்கிடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்து, பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த மன்றத்தில் தொழில்நுட்பம், புத்தாக்க படைப்புக்கள், நிலையான  அபிவிருத்தி, உற்பத்தி, தொழில்துறை மேம்பாடு, விவசாய  உணவு பதப்படுத்துதல், வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் தீர்வுகள், நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, இலங்கை வர்த்தக சபை மற்றும் பெனெலக்ஸ்  இலங்கை வணிகக் கவுன்சில் ஆகியவற்றுக்கிடையில் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக ஒத்துழைப்பு மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை வர்த்தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ, இலங்கை பெனெலக்ஸ் வணிகக் கவுன்சிலின் தலைவர் பர்ஹாத் அமித், பெனெலக்ஸ் இலங்கை வணிகக் கவுன்சிலின் தலைவர் தோமஸ் டி பியூல் மற்றும் அதன் பொதுச் செயலாளர் சம்பத் தென்னகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, இலங்கை பெனெலக்ஸ் வணிகக் கவுன்சிலின் தலைவர் பர்ஹாத் அமித் மற்றும் துணைத் தலைவர் ஷமீல் மொஹிதீன் ஆகியோர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, இருநாடுகளின் தூதுவர்களும்  ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44