சிவகார்த்திகேயன் நயன்தாரா மோகன் ராஜா கூட்டணியில் உருவான வேலைக்காரன், பாகுபலி படத்தைப் போல் இரண்டு பாகங்களாக வெளியிடலாமா? என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை எடிட்டிங் செய்த பின்னரும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றும், முதல் பாகத்தை பொங்கல் திருவிழாவின் போதும், இரண்டாம் பாகத்தை ஏப்ரல் 14 ஆம் திகதியன்று வெளியிடலாம் என்றும் திட்டமிட்டு வருகிறார்களாம்.

ஆனால் இதற்கு இதுவரை சிவகார்த்திகேயன் பரிபூரணமாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் ஓகே சொல்வார் என்கிறார் அவரது நண்பரும், தயாரிப்பாளருமான ராஜா.

வேலைக்காரன் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் மாதம் வெளியாகாது என்றே தற்போது வரை படக்குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்