இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் துவிச்சக்கர வண்டியில் வலம்வரும் இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபனத்தின் 45 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அதன் ஊழியர் ஒருவரால் இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அனைத்தையும் துவிச்சக்கர வண்டியில் வலம்வரும் நிகழ்வு ஒன்றினை கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தின் அனுமதியுடன் ஆரம்பித்துள்ளார்.
இலங்கை மீன்பிடித் துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபன ஊழியர் ரி.பி.கொஸ்ஸா என்பவரே இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் வியாழக்கிழமை காலை ஹம்பாந்தோட்டை கிரிந்தையில் ஆரம்பித்து இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை வந்தடைந்த இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ரி.சிவரூபன் மற்றும் ஏ.ரி.எம்.ஜி அமரஜீவ ஆகியோரின் தலைமையில் துறைமுக ஊழியர்கள் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வரவேற்பும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் வாழைச்சேனை துறைமுகத்தில் வியாழக்கிழமை இரவு தங்கியிருந்து வெள்ளிக்கிழமை காலை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுள்ளதுடன், வெள்ளிக்கிழமை திருகோணமலை கொட்வே துறைமுகத்தை சென்றடையவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் வீரர் கொழும்பு தலைமை காரியாலயத்தில் இருந்து செப்டம்பர் 26 ஆம் திகதி சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்து மீண்டும் ஒக்டோபர் 2 ஆம் திகதி தலைமை காரியாலயத்திலையே ஓட்டத்தை நிறைவு செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வுகளில் கலந்து திறமைகளை வெளிப்படுத்திய வீரர் என்பதுடன், இவரின் இந்த ஊக்கம் நிறைந்த செயற்பாட்டுக்கும் திறமைக்கும் தலைமை காரியாலயம் உட்பட அனைத்து துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்குவதுடன் ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM