திஹாரி, கலகெடிஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 4 மாடி வர்த்தக நிலையமொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இத் தீ விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும்  வர்த்தக நிலையத்திலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.