பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

21 Jun, 2026 | 02:25 PM
image

பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் பார­தூரத்தன்மை தொடர்பில் தற்­போது தெற்கில் பல்­வேறு தரப்­பி­னரும் கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றனர். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக முற்று முழு­தாக நீக்க வேண்டும் என்று சிங்­கள, பெளத்த பேரி­ன­வாத தரப்­பி­னரும் தற்­போது கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் அர­சாங்கப் புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தானி சுரேஷ் சலே, கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக் ஷ மற்றும் அர­சாங்கப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் இருவர் உட்­பட்ட மூவ­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்றம் வெளி­நாட்டு பயணத் தடை விதித்­தி­ருக்­கின்­றது.

இதன் அடிப்­ப­டையில் தன்னை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­வ­தற்கு தடை விதிக்­கு­மாறு கோரி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய  ராஜபக் ஷ மனு தாக்கல் செய்­துள்ளார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தான் கைது செய்­யப்­ப­டலாம் என்று கரு­தி­ய­மையின் கார­ண­மா­கவே கோட்­டா­பய  ராஜபக் ஷ இந்த முன் ஜாமீன் மனு­வினை தாக்கல் செய்­தி­ருக்­கின்றார்.

நாட்டில் மூன்று தாசப்­த ­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்­தத்தின் போது பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மா­னது தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. கேட்ட கேள்­வி­யின்றி எங்கும், எப்­போதும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தமிழ் இளைஞர், யுவ­திகள் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டனர். இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் படைத் தரப்­பி­னரால் பல்­வேறு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்­டனர். சித்­தி­ர­வ­தைகள் மூலம் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்டு தமிழ் இளைஞர், யுவ­திகள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் தண்­டிக்­கப்­பட்­டனர்.

அன்று பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு எதி­ராக மட்­டுமே தெற்கின் சிங்­கள, பெளத்த அர­சி­யல்­வா­திகள் பயன்­ப­டுத்­திய நிலையில் தற்­போது அந்த சட்­டத்தின் கீழேயே பலரும் கைது செய்­யப்­படும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

அரச புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னி­யாக இருந்த சுரேஷ் சலே பெரு­ம­ள­வான தமி­ழர்­களை புலிகள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை பயன்­ப­டுத்தி கைது செய்­தி­ருப்பார். இதே­போன்றே முன்னாள் ஜனா­தி­பதி கோட்­ட­பாய  ராஜபக் ஷவும் அவர் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த போதும் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்­னரும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பெரு­ம­ள­வான தமி­ழர்­களை தடுத்து வைப்­ப­தற்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தி­ருப்பார்.

இவ்­வாறு அன்று பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை தமி­ழர்கள் மீது ஏவி விட்ட தெற்கின் அர­சியல் தலை­மைகள் மற்றும் படைத் தரப்பின் உயர்­மட்­டத்­தினர் தற்­போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­படும் சூழல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன் கார­ண­மா­கவே தற்­போது தெற்கின் சிங்­கள, பெளத்த தேசி­ய­வாத சக்­தி­யினர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை முற்­றாக நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வரு­கின்­றனர். அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மா­னது மனி­த­கு­லத்­துக்கு ஏற்­பு­டை­ய­தல்ல என்றும் அவர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச, பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பில, புதிய ஜன­நா­யக அதி­காரம் கட்­சியின் தலைவர் திலித் ஜய­வீர உட்­பட்­ட­வர்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கோர முகம் தொடர்பில் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

முன்னாள் நீதி அமைச்­ச­ரான விஜே­தாச  ராஜபக் ஷவும் இந்த பயங்­க­ர­வாத தடைச் சட்டம் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். ‘சுரேஷ் சலே தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். ஆனால், விசா­ரணை என்ற பெயரில் கொலை செய்யக் கூடாது. பயங்­க­ர­வாத தடைச் சட்டம் மிகவும் மோச­மா­னது. மனி­த­கு­லத்­துக்கு எதி­ரா­னது. யுத்தம் இல்­லாத நாட்டில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் எதற்கு? அந்த சட்­டத்தை முழு­மை­யாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்­பிட்ட மக்கள் விடு­தலை முன்­னணி இன்று பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­ப­டு­கின்­றது. இதனை அனு­ம­திக்க முடி­யாது’ என்று முன்னாள் அமைச்சர் விஜே­தாச  ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் நீதி­ய­மைச்­ச­ராக பதவி வகித்த விஜே­தாச  ராஜபக் ஷ, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்கி, அதற்கு பதி­லீ­டாக புதிய சட்­டத்தைக் கொண்­டு­ வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்தார். ஆனால், அந்த முயற்சி கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. இன்று அவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மா­னது மனித குலத்­துக்கு எதி­ரா­னது என்றும் அதனை நீக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்­தி­ருக்­கின்றார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக நீக்­குவோம் என்று தற்­போது ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. தேசிய மக்கள் சக்­தி­யா­னது எதி­ர­ணியில் இருந்­த­போது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினை முற்­றாக ஒழிப்போம் என்றே கூறி வந்­தது. ஆனால், தற்­போது ஆட்­சிக்கு வந்­துள்ள தேசிய மக்கள் சக்­தி­யா­னது பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக ஒழிப்­ப­தற்கு பதி­லாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்­தினை கொண்டு வரு­வ­தற்கு முயல்­கின்­றது.

கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­தி­ருந்த நீதி­ய­மைச்சர் ஹர்ஷன நாண­யக்­கார, ‘பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும். அதற்கு பதி­லீ­டாக பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்­துக்­கான பிரே­ரணை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அந்த சட்­ட­வ­ரைபு தயா­ரிக்­கப்­பட்­டதும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்’ என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

1979ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச் சட்டம் 45 வரு­டங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த சட்­டத்­தினால் தற்­போது ஆட்­சி­யி­லுள்ள தேசிய மக்கள் சக்­தியின் பிர­தான கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­னணி பெரும் பாதிப்­பு­களை சந்­தித்­தி­ருந்­தது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கிளர்ச்­சிகள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழேயே அடக்­கி­யொ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்தச் சட்­டத்தின் பிடியில் பெரு­ம­ள­வான மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர்கள் சிக்­கி­யி­ருந்­தனர். இவ்­வாறு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பெரும் அநீ­தி­களை சந்­தித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது தற்­போது அந்தச் சட்­டத்தை முற்­றாக நீக்­காது புதிய சட்ட வரைபை கொண்டு வர எத்­த­ணிக்­கின்­றது.

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றியம் உட்­பட சர்­வ­தேச அமைப்­பு­களும் சர்­வ­தேச மனித உரிமை நிறு­வ­னங்­களும் கோரி வரு­கின்­றன. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தாக இலங்கை அளித்த வாக்­கு­றுதி பல வரு­டங்­க­ளா­கியும் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் இலங்­கைக்கு வழங்­கப்­பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை யொன்றையும் வெளியிட்டிருக்கின்றது. அதே போன்றே சர்வதேச மன்னிப்பு சபை உட்பட பல்வேறு தரப்பினரும் இத்தகைய கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.

அன்று பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று வடக்கு, கிழக்கில் இருந்தே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழ் இளைஞர், யுவதிகள் இந்தச் சட்டத்தினால் சொல்லொணா துன்பங்களை அனுபவித்ததன் காரணமாகவே இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

தற்போது தெற்கிலும் சிங்கள, பெளத்த தேசியவாத சக்திகள் இந்த சட்டத்தை நீக்குமாறு குரல் கொடுத்து வருகின்றனர். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41