இங்­கி­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நான்­கா­வது ஒரு நாள் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் வீரர் எவின் லீவிஸ்-க்கு காயம் ஏற்­பட்­டதால் அவர் இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

லண்டன் ஓவலில் நடை­பெற்ற இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 356 ஓட்­டங்­களைக் குவித்­தது. 

அதி­ரடி ஜாலம் காட்­டிய எவின் 176 ஓட்­டங்­களை (130 பந்து, 17 பவுண்­டரி, 7 சிக்ஸர்) விளா­சிய நிலையில், காய­ம­டைந்தார்.

இங்­கி­லாந்தின் ஜாக் போல் வீசிய பந்து அவ ரது வலது கணுக்­காலை பதம் பார்த்து விட்­டது. வலியால் துடித்த அவரால் எழுந்து நிற்கக் கூட முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து மிகுந்த ஏமாற்­றத்­துடன் ஸ்டிரச்சர் உத­வி­யுடன் வெளி­யே­றினார். 

மேலும் 22 பந்­துகள் எஞ்சி இருந்­ததால் கடைசி வரை களத்தில் நின்­றி­ருந்தால் இரட்டைச் சதம் அடித்த 6-ஆவது வீரர் என்ற சாதனை பட்­டி­யலில் இணைந்­தி­ருப்பார். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக காயத்தில் சிக்கிவிட்டார். 

இறு­தியில் இந்தப் போட்­டியில் இங்­கி­லாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 6 ஓட்­டங்­க ளால் வெற்­றி­பெற்­றது.