தனது 10 வயது மகளை பந்­தயப் பொரு­ளாக வைத்து சூதாட்ட விளை­யாட்டு விளை­யாடி தோற்ற தந்­தை­யொ­ருவர் தொடர்பில் ரஷ்ய பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

ரஷ்­யாவின் தூர கிழக்குப் பிராந்­தி­ய­மான வொலோ­செவ்­காவைச் சேர்ந்த அலெக்­ஸாண்டர் பசுரின் (30 வயது) என்ற மேற்படி தந்தை, தனது மக­ளான எக­ரெ­றினா பசு­ரி­னாவை பந்­தயப் பொரு­ளாக வைத்து செர்­கேயி பொனா­மெரோவ் (40 வயது) என்­ப­வ­ருடன் சூதாட்ட விளை­யாட்டில் ஈடு­பட்டு தோற்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து சூதாட்­டத்தில் வெற்றி பெற்ற செர்­கேயி, எக­ரெ­றினா கல்வி கற்கும் பாட­சா­லைக்கு சென்று அவரைத் தூக்கிக் கொண்டு சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் பாட­சாலை நிர்­வா­கமும் சிறு­மியின் தாயரும் சிறுமி கடத்­தப்­பட்­டுள்­ள­தாக செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து செர்­கே­யியை கண்­டு­பி­டித்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட போது இந்த சூதாட்ட விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.