தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் குறித்த சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர். இதன் மூலமாக 176 பேருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி இவர்களிடம் இருந்து தகவல்களை வழங்குவதற்கு மொத்தமாக 933 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக தகவல் வழங்கல் அதிகாரியும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளருமான பி.எம்எம்.எம் பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு நிதி மற்றும் ஊடக துறை அமைச்சு நேற்று வெள்ளவத்தை கோல்ட் டவர் ஹோட்டலில் நடத்திய மாநாட்டின் போதுவெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ வெளியீட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலப்பகுதிக்குள் குறித்த சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர். இதன் மூலமாக 176 பேருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி இவர்களிடம் இருந்து தகவல்களை வழங்குவதற்கு மொத்தமாக 933 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
மக்களினால் கோரப்பட்ட தகவல்களின் பிரகாரம் அரச ஊழியர்களினால் எடுக்கப்படும் தீர்மானத்தின் மீது மக்கள் அவ நம்பிக்கை கொண்டுள்ளமை கோரப்பட்ட தகவல்களின் ஊடாக எமக்கு கண்காணிக்க முடிந்தது. எனவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்.
அத்துடன் தகவல் அறியும் சட்டமூலத்தை பயன்படுத்தி அரச ஊழியர்களை சிக்கலுக்கு தள்ளும் வகையிலான தகவல்களை கோருவதற்கு ஒரு சில குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். இந்த குழுவினர்களின் தகவல் கோரிக்கைகள் சட்டமூலத்தின் விதிமுறைகளின் பிரகாரம் வழங்க முடியாதவைகளாகும். ஒரு வருட காலப்பகுதிக்குள் இனங்காணப்பட்ட பிரதான பிரச்சினையாக மேற்கூறப்பட்ட விடயங்களை கருத முடியும்.
மேலும் பல வருடங்களுக்கு முன்புள்ள தகவல்களை சிலர் கோருகின்றனர். உண்மையில் இவ்வாறான தகவல்களை பெறுவதில் பெரும் சிக்கல் உள்ளன. தற்போதைக்கு அவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்வது கடினமாகும். எனவே தகவல் வழங்கும் சட்டமூலத்தின் ஊடாக இவ்வாறான சவால்களுக்கு அதிகாரிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM