சிசுவொன்றின் சடலத்தை நாய் இழுத்துச்செல்வதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸருக்கு அறிவித்ததையடுத்து பிறந்து  ஒரு நாளேயான ஆண்  சிசுவின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேர்கசோல்ட் தோட்ட  எல்பட கீழ் பிரிவில் இன்று மாலை 4  மணியளவில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குடியிருப்புகளை அண்மித்த வாசிகசலைக்கருகிலுள்ள  வீட்டுத்தோட்டமொன்றிலிருந்தே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சிசுவின் தலைப்பகுதியை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசுவின் சடலத்தை  நாய் ஒன்று  இழுத்துச் செல்வதை கண்ட பிரதேச மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே சிசுவின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில்  பிரதேச தாதியரின் உதவியுடன்  பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசரணையை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.