வவுனியா போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடல் நடவடிக்கையின் போது கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி செல்ல இருந்த 60 வயதுடைய நபரையே வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதுடன் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதி மன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.