ரயின் முன் பாய்ந்து வயோதிபப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, அப்புத்தளை, பங்கட்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கவேல் பார்வதி என்ற 67வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில், பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம், அப்புத்தளை அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.