மேலாடையின்றி உதைபந்தாட்டப் போட்டியொன்றைக் கண்டுகளித்த இளம் பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

ரோஸ் பிக்லோ (23) இந்தப் பெண், அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரிலுள்ள உதைபந்தாட்டப் போட்டியொன்றைக் காணச் சென்றிருக்கிறார்.

இரசிகர்கள் நிறைந்த பகுதியில் அமர்ந்த அவர், தனது மேலாடையைக் கழற்றி எறிந்துவிட்டு அரை நிர்வாணமாக அமர்ந்து போட்டியை இரசித்தார்.

இதைக் கண்ட பொலிஸார் பிக்லோவிடம் வந்து மேலாடையை அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். என்றபோதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த பிக்லா, அங்கே மேலாடையின்றி அமர்ந்திருந்த ஆண்களைச் சுட்டிக்காட்டி, தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

கடைசியில், போதையில் இருந்த அவரை பொலிஸார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருக்கும் பிக்லோவுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது மூவாயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படலாம்.