மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இலகுவான வெற்றி

Published By: Vishnu

18 Jun, 2026 | 12:30 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் 10ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இலகுவான வெற்றிகளை ஈட்டின.

இந்த வெற்றிகளுடன் குழு 1இல் தோல்வி அடையாத அணிகளாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இருப்பதுடன் அணிகள் நிலையில் முதலிரண்டு இடங்களைப் பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பையும் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளன.

நெதர்லாந்தை இலகுவாக வென்றது இந்தியா

இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மிக இலகுவாக 95 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்ம்ரித்தி மந்தனா (74), ஷபாலி வர்மா (55) ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 115 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தையும் இட்டுக்கொடுத்தனர்.

அவர்களுக்கு அடுத்ததாக ரிச்சா கோஷ் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கெரோலின் லெங்கே 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஹீதர் சீஜர்ஸ் (21), ஃபீப் மோல்கென்போயர் (15), அணித் தலைவி பாபெட் டி லீட் (28), ஸ்டெரே கலிஸ் (18) ஆகிய முதல் நான்கு துடுப்பாட்ட வீராங்கனைகளே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷபாலி வர்மா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நந்தனி ஷர்மா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஸ்ம்ரித்தி மந்தனா.

பங்களாதேஷை பதம்பார்த்தது அவுஸ்திரேலியா

பங்களாதேஷுக்கு எதிராக இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணித் தலைவி நிகார் சுல்தானா (27), ரிட்டு மோனி (16) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி மொலினொக்ஸ், எலிஸ் பெரி ஆகிய இருவரும் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர். கிம் கார்த் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றயீட்டியது.

ஜோர்ஜியா வொல் 45 ஓட்டங்கaளுடனும் எலிஸ் பெரி 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பெத் மூனி 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆட்டநாயகி: எலிஸ் பெரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55