ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப்பிலும் அசத்தினார் ருமேஷ் தரங்க

Published By: Vishnu

17 Jun, 2026 | 09:17 PM
image

(நெவில் அன்தனி)

செக் குடியரசில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் ருமேஷ் தரங்க வெற்றியீட்டி அசத்தினார்.

அப் போட்டியில் ஈட்டியை 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

முதலாவது முயற்சியில் 85.87 மீற்றர் தூரத்தையும் இரண்டாவது முயற்சியில் 86.30 மீற்றர் தூரத்தையும் பதிவுசெய்த ருமேஷ் தரங்க மூன்றாவது முயற்சியில் 86.57 மிற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெற்றியீட்டினார்.

இந்தப் போட்டியில் கிரனேடவின் இரட்டை உலக சம்பியன் அண்டர்சன் பீட்டர்ஸ் (84.27 மிற்றர்) இரண்டாம் இடத்தையும் தென் ஆபிரிக்காவின் டௌ ஸ்மித் (83.90 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெற்றியீட்டியதுடன் புதிய தேசிய சாதனையையும் நிலைநாட்டினார்.

அவரது இந்த தூரப் பெறுதி உலக ஈட்டி எறிதலில் அனைத்துக் காலத்துக்குமான 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் உலக தரவரிசையில் தற்போது 3ஆம் இடத்திலுள்ள ரூமேஷ் தரங்க, இந்த வருடத்துக்கான அதிசிறந்த முதல் மூன்று தூரப் பெறுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளார்.

இந்த வார இறுதியில் தோஹவில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய பின்னர் ருமேஷ் தரங்க நாடு திரும்புவார்.

இந்த வருடம் க்ளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக ருமேஷ் தரங்க பங்குபற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55