அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி ' படத்தின் அப்டேட்

17 Jun, 2026 | 05:16 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'இதயம் முரளி' படத்தில் இடம்பெற்ற 'வாமா வாமா' எனும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம், ஏஞ்சலீனா, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மனோஜ் பரஹம்ஸா- சி ஹெச் சாய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'சொல்லாத காதலா..துள்ளாத மோதலா.. தீராத தேடலா..உன் நெஞ்சில் ஊடலா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் தனுஷ் பாடியிருக்கிறார். தான் நேசிக்கும் பெண்ணின் மீதான காதலை நாயகன்...மெல்லிசையுடன் சொல்லியிருக்கும் இந்த பாடல்.. இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அறிமுக நடிகர் தமிழ் உமாபதி நடிக்கும்...

2026-07-22 16:53:50
news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓகஸ்ட்டில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹா ய்'

2026-07-22 12:10:13
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11