சிறந்த நடிப்பிற்காக இந்திய தேசிய விருதை வென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேகப் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரவீண் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... இத்திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் - சட்டத்தரணிகளுக்கான சீருடை - என ஃபர்ஸ்ட் லுக் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்... இத்திரைப்படம் ஜூலையில் வெளியாவதால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM