பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 பதுளையிலிருந்து பசறை நோக்கி பயணித்த கார் பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 

காரை செலுத்திய உரிமையாளரான சாரதி கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.