கடனை‌ திருப்பி செலுத்துவதற்கான எளிய குறிப்பு..!?

17 Jun, 2026 | 04:17 PM
image

சூழலின் அழுத்தங்களால் வேறு வழி இல்லாமல் கடன் வாங்கி நெருக்கடியான நிலையை சமாளித்த பலரும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முயற்சித்தாலும் வட்டித் தொகையின் அதீத வளர்ச்சி காரணமாக கடனை முழுமையாக செலுத்த முடிவதில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்களின் விவரிக்க இயலாத நெருக்கடிகளால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கடன் சுமை அதிகரிக்க அதிகரிக்க மனித வளம் அதாவது உழைப்பதற்கான திறன் குறையும் என உளவியல் வல்லுனர்கள் எச்சரிக்கும் நிலையில், பெரும்பாலானவர்கள் கடனை திரும்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து தேடத் தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான எளிய குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.

ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தாலும்.. வட்டித் தொகை மட்டுமே ஆயிரக்கணக்கில் இருந்தாலும்.. அது தொடர்பான அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், எம்மால் கடனை திருப்பி செலுத்த இயலும் என்ற உறுதியுடன் நாளாந்தம் சிறிய அளவிலான தொகையை ஒதுக்க தொடங்குங்கள்.

இந்த தொகையை செவ்வாய்க்கிழமை நாளன்று வரும் எமகண்ட தருணத்தில் அல்லது குளிகை நேரத்தில் கடனுக்கான நீங்கள் ஒதுக்கீடு செய்யும் தொகையை தனியே எடுத்து வைத்து விட வேண்டும். உங்களுடைய தொகை சிறியது என்பதால் கடன் கொடுத்தவர் அதனை வாங்க மறுக்கலாம்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை எமகண்ட தருணம் அல்லது சனிக்கிழமை சனி ஹோரை தருணத்தில் நீங்கள் ஒதுக்கீடு செய்த சிறிய அளவிலான கடன் தொகையை ஒரு சதுர வடிவிலான அடர் நீல வண்ண துணியில் கட்டி வைக்க தொடங்குங்கள். 

இப்படி நீங்கள் கடனை திரும்பி செலுத்துவதற்கான சூட்சமமான மற்றும் எளிய குறிப்பினை கடைப்பிடிக்க தொடங்கினால்... அதற்கான பிரத்யேகமான கூடுதல் வாய்ப்புகளும்... அதனூடாக நிதி ஆதாரங்களும் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

அதனைக் கொண்டு ஓராண்டிற்குள் குறிப்பிட்ட தொகையை.. கடன் கொடுத்தவர்களிடம் நீங்கள் திருப்பி செலுத்தும் போது, உங்களுடைய கடன் சுமை குறைவதையும் மனித வளம் மேம்பட்டு வருவாய் அதிகரிப்பதையும் அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரித்திரம் விலகுவதற்கான எளிய குறிப்பு..!?

2026-07-22 16:48:34
news-image

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சம குறிப்பு

2026-07-21 17:22:29
news-image

காணி விற்பனை மூலம் அனுகூலம் பெறுவதற்கான...

2026-07-20 17:07:47
news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55