இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் முன்­னணி சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் முழு­வதும் காவல் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் முன்­னணி சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை  பிரிஸ்­டோ­னி­லுள்ள பகு­தியில் ஒரு நபரை தாக்­கிய சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது. 

இதில் சந்­தே­கத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை பொலிஸார் அழைத்துச் சென்று இரவு முழு­வதும் காவல்­நி­லை­யத்­தி­லேயே தடுத்து வைத்­துள்­ளனர். பின்னர் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் விடு­தலை செய்­துள்­ளனர்.

அவ­ருடன் மற்­றொரு வீர­ரான ஹேல்ஸும் சென்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனால் இரு­வரும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக நேற்று நடை­பெற்ற 4ஆ-வது ஒருநாள் போட்­டியில் பங்­கேற்­க­மாட்­டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்னும் சில தினங்­களில் ஆஷஸ் தொட­ருக்­கான அணி அறி­விக்­கப்­படும் நிலையில் பென் ஸ்டோர்க்ஸ் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.