(செ.சுபதர்ஷனி)
வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி நபரொருவரிடம் இருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி, நபரொருவரிடம் இருந்து 4,990,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டுக்கு அமைவாக, கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர், இந்தியாவில் பிறந்தவர் எனவும் பின்னர் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்,.கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட
மேற்படி மோசடி சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM