காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு ஆலோசனை - கருணநாதன் இளங்குமரன் எம்.பி

17 Jun, 2026 | 05:23 PM
image

(எம்.நியூட்டன்)

காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு பிரதி அமைச்சருடன் கலந்தாலோச்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (17) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மீள் குடியேற்ற அமைச்சசினால் 10இலட்சமாக இருந்த வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் 15 லட்சமாக அதிகரித்து பின்னர் மீளவும் தற்போது 5 இலட்சம் அதிகரிக்கப்பட்டு 20 இலட்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் 125 வீடுகளுக்கான காசோலைகள் கையளிக்கப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு தேவையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாகவும். மேலும் காணி இல்லாதவர்களுக்கு பொறிமுறை ஒன்றின் ஊடாக அவர்களுக்கும் வீட்டு திட்டத்தை வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அமைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடங்களின் அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும், தற்போதைய எதிர்கட்சி தலைவர் முன்னர் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசாவால் கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுவதாகவும், அதற்குரிய பொறிமுறையை ஏற்படுத்தி நிவர்த்தி செய்யப்படும் எனவும், தற்போது வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்துக்கான காசோலையை மக்கள் பெற்று வீட்டினை துரிதமாக நிர்மாணிக்க வேண்டும் எனவும் அதற்கு அரச உத்தியோத்தர்கள் பிரதேச செயலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46
news-image

வெவ்வேறு இடங்களில் சோதனைகள்: 280 லீற்றருக்கும்...

2026-07-20 12:08:08
news-image

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2026-07-20 11:56:17
news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47
news-image

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை:...

2026-07-20 09:20:53
news-image

நாட்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்...

2026-07-20 08:59:40