வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

Published By: Vishnu

17 Jun, 2026 | 05:47 AM
image

2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16.06.2026)  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும் பங்குபற்றினார்கள்.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபரின் தலையுரையினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்  கருணநாதன் இளங்குமரன் அவர்களினால் கருத்துரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பி சரத் அவர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தலா ரூபா 02.00 மில்லியனில் நடைமுறைப்படுத்தப்படும் 827 வீடுகளில் செவ்வாய்க்கிழமை (16) 125 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூபா 400,000.00 வீதம் காசோலை வழங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளில் முதற்கட்டமாக 180 பயனாளிகளுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. 

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான   எஸ். கபிலன், மேலதிக அரசாங்க அதிபர்   கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  பா. ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தித்வா பாதிப்பு : வீடுகளை இழந்தவர்களுக்கான...

2026-07-13 17:19:23
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையின் மேல் போராடிய...

2026-07-13 17:03:24
news-image

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான, வசதிகள்...

2026-07-13 17:17:28
news-image

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான...

2026-07-13 16:54:47
news-image

ஆற்றில் நீராடச் சென்ற மாணவனை காணவில்லை

2026-07-13 16:49:33
news-image

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு: இன்று முதல்...

2026-07-13 16:43:03
news-image

முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம்...

2026-07-13 16:29:44
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-13 16:42:47
news-image

தேசிய பதப்படுத்தப்பட்ட தேயிலை இலக்கை அடைவதற்காக...

2026-07-13 16:36:38
news-image

“தித்வா” பாதிப்பு : புதிய தெனியாய...

2026-07-13 16:02:52
news-image

மூதூர் மஹாவலி கங்கையில் மூழ்கிய பொலிஸ்...

2026-07-13 15:17:25
news-image

கைதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க விதிக்கப்பட்ட...

2026-07-13 15:07:09