இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இலங்கையின் இணையதள விசா விண்ணப்ப சேவை வடகொரியார்களுக்கு வழங்கப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பிக்கும் நபர் தடை செய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் உள்ளவரா என்பது குறித்தும் குடிவரவு அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னரே அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வர் என்றும் தெரியவருகிறது.

வேறு நாடுகளுக்கான பயணத்தின்போது இடைத்தங்கலுக்காக இலங்கை வரும் வடகொரியர்கள் குறித்தும் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

மேலும், உலக நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுரகங்களும் அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர எத்தனிக்கும் வடகொரியர்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.