நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் 'லவ் ஓ லவ் 'படத்தின் டீசர் வெளியீடு

16 Jun, 2026 | 05:47 PM
image

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் தனுஷின் உறவினரும், நடிகருமான பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'லவ் ஓ லவ்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படத்தில் பவிஷ் நாராயண்,  நாகா துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார் , வனிதா விஜயகுமார் , ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜினிமா மீடியா &  என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் தர்ஷன், கே பி வை பாலா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் பேசுகையில், '' இது எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம். இப்படத்தின் கதையை கேட்டவுடன்... வயசு வித்தியாசம் இன்றி அனைவருக்கும் எளிதாக தொடர்பு கொள்ளும் என நம்பினேன். அதேபோல் இப்படத்தின் கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்து இப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை பட மாளிகையில் பார்க்கும்போது அனைவரும் தங்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54