'காளிதாஸ் 2 'படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும், டிஜிட்டல் தள ரசிகர்களுக்கும் அறிமுகமாகி பிரபலமான நடிகர் அஜய் கார்த்தி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டார்க்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கல்யாண் கே . ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டார்க்' திரைப்படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, வி டி வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன் - கணேஷ் கே. பாபு - ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா ரஞ்சித்- கார்த்திக் யோகி -விக்னேஷ் கார்த்திக் -மாறன் கார்த்திகேயன்- நடிகர்கள் கௌதம் கார்த்திக்- ரியோ -கலையரசன் -தயாரிப்பாளர்கள் டி. சிவா, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி நாயகன் அஜய் கார்த்தி பேசுகையில், ':டார்க் திரைப்படம் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. படமாளிகைக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புதுவகையான அனுபவத்தை இந்த படம் வழங்கும்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM