எம்மில் சிலர் பாடசாலையில் பயிலும் போது குறிப்பிட்ட பாடப்பிரிவிலா மட்டும் தொடர் தோல்வியை எதிர்கொண்டதை நாம் அறிந்திருப்போம். சிலர் அவர்கள் அனுபவம் பெற்ற துறையில் தொழிலை தொடங்குவார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டாலும்... அதனையும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு, மீண்டும் அதே தொழிலை இடத்தை மாற்றி வேறு இடத்தில் மேற்கொள்வார்கள்.
அப்போதும் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால்.. தோல்விகள் தொடர்கதையாக நீண்டால்... அவை உங்களுடைய முயற்சியின் குறையல்ல... உங்களுக்கு துரதிர்ஷ்டம் அதாவது தரித்திரம் தொடர்கிறது என பொருள். இத்தகைய தொடர் தோல்விகளை மாற்றி அமைத்து வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கான வழிமுறையையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: பித்தளை அல்லது காப்பர் சொம்பு, நீர், புதினா உப்பு- கருப்பு உப்பு - இந்துப்பு - கல்லுப்பு, பிரண்டை உப்பு.
ஒரு ஞாயிற்றுக்கிழமையை தெரிவு செய்து கொண்டு ஓய்வு நேரத்தில் அல்லது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து செம்பில் நீரை நிறைத்து அதில் சிறிதளவு ஐந்து உப்புகளையும் போட்டு அதனை மூடி விட வேண்டும். அதன் பிறகு அரை மணித்தியாலம் கழித்து அந்த சொம்பில் உள்ள நீரை சிறிதளவு உங்களது தலையிலும், வீடு முழுவதும் தெளித்திட வேண்டும்.
இத்தகைய தருணத்தில் தொடர் தோல்விகள் மாறி, தொடர் வெற்றிகள் ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டே தெளித்திட வேண்டும். மீதமுள்ள நீரை பாதுகாப்பாக வைக்கலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால்... தொடர் தோல்விகளில் தடை ஏற்பட்டு, பிறகு தொழிலில் வெற்றி பெறத் தொடங்கி... லாபம் ஈட்டி, மகிழ்ச்சியை பெருக்குவீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM