501 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்ட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் திறப்பு

Published By: Digital Desk 3

16 Jun, 2026 | 05:02 PM
image

501 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று (16) செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

கொரிய சர்வதேச சுகாதார சேவை மன்றம் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவித் திட்டத்தின்கீழ், இலங்கையிலுள்ள கொரியக் குடியரசுத் தூதுவர் மியோன் லீ மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாண உயிர்மருத்துவ பொறியியல் சேவை அலகுகளின் பாவனைக்காக 228 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன மருத்துவப் பரிசோதனை மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கான உபகரணங்களும் அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் மருத்துவத்துறையில் எம்.ஆர்.ஐ, சி.ரி ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களின் தொடர்ச்சியான நோயாளர் பராமறிப்புக்கும் தடையற்ற சேவைக்கும் இந்த மத்திய நிலையம் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டங்களுக்கு கொரிய அரசாங்கம் வழங்கிவரும் பல தசாப்தகால நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34