மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த புதிய தேசிய செயல் திட்டம் - அரசாங்கம் அறிவிப்பு

Published By: Digital Desk 3

16 Jun, 2026 | 04:26 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மனித - யானை மோதல்களை முறையாகக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் விரிவாக்கம் மற்றும் காடழிப்பு போன்ற காரணங்களால், காட்டு யானைகள் நடமாடும் பாரம்பரியப் பாதைகளும் அவற்றின் வாழிடங்களும் பெருமளவில் அழிந்துபோயுள்ளன. இதன் விளைவாகவே இந்த மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

இலங்கையில் இந்த மனித - யானை மோதலானது மிகவும் பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களும், 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 பிரிவுகளும் இந்த மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட காட்டு யானைகள் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் சுமார் 7,450 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் பெருமளவிலான மனித உயிர்களும், காட்டு யானைகளும் பலியாவதுடன், ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துச் சேதங்கள் (வீடுகள் மற்றும் பயிர்ச்சேதங்கள்) பதிவாகி வருகின்றன.

இதற்கு முன்னர், கடந்த 2020ஆம் ஆண்டில் மனித - யானை மோதலைத் தணிப்பதற்கான ஒரு தேசிய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த சில வருடங்களில் இந்த மோதலின் தன்மையும், தற்போதைய சூழ்நிலைகளும் பாரியளவில் மாற்றமடைந்துள்ளன.

எனவே, பழைய திட்டத்தை விடவும் தற்கால சூழலுக்குப் பொருத்தமான, மிகவும் பயனுள்ள புதியதொரு தேசிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. இதைக் கருத்திற்கொண்டே, புதிய திட்டத்தை வரைவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ;...

2026-07-17 13:04:19