ரோஹிங்யா அகதிகளை பெளத்த பிக்குகள் தாக்கியிருந்தால் கைது செய்யவேண்டும்.!

Published By: Robert

28 Sep, 2017 | 12:06 PM
image

இலங்­கை­யி­லி­ருந்து கடந்த காலங்­களில் 20 இலட்சம் பேர் அக­தி­க­ளாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். அதை தெரிந்து கொள்­ளாத பெளத்­த­வா­தி­களே ரோஹிங்யா அக­தி­க­ளுக்கு எதி­ராக முரண்­ப­டு­கின்­றனர். அக­திகள் விட­யத்தில் இலங்­கையின் கொள்­கையில் மாற்றம் இல்லை. அக­திகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.  

ரோஹிங்யா அக­தி­களை பெளத்த பிக்­குகள் தாக்­கி­யி­ருந்தால் அவர்­களை கைது செய்ய வேண்டும். பொலிஸார் இந்த தாக்­கு­தலை வேடிக்கை பார்த்­தமை உண்­மை­யானால் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை தெரி­விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க  தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.   ரோஹிங்யா அக­தி­களை பெளத்த பிக்­குகள் தாக்­கி­ய­தா­கவும் பொலிசார் இந்த குழப்­பங்­களை வேடிக்கை பார்த்­த­தா­கவும் தெரி­ய­வரும் நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் எவ்­வாறு செயற்­பட போகின்­றது என கேள்வி எழுப்­பிய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், அக­தி­களை பெளத்த பிக்­குகள் தாக்­கி­யி­ருந்தால் அவர்­களை கைது செய்ய வேண்டும். பொலிசார் இந்த தாக்­கு­தலை வேடிக்கை பார்த்­தமை உண்­மை­யானால் அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  இலங்­கையில் தற்­போது  ரோஹிங்யா முஸ்­லிம்கள் தஞ்சம் கோரி­யுள்­ள­தாக கூறிக்­கொண்டு இன்று எதிர்ப்பை தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனால் ரோஹிங்யா முஸ்­லிம்கள் இலங்­கையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து அக­தி­க­ளாக வாழ்­கின்­றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மியன்­மாரில் இருந்து 55  ரோஹிங்யா  முஸ்­லிம்கள் இலங்­கையில் தஞ்சம் புகுந்­தனர். 

அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் திருப்பி அனுப்­பப்­பட்­டனர். அதேபோல் 2013 ஆம் ஆண்டு மீண்டும் மியன்­மாரில் இருந்து 101  ரோஹிங்யா முஸ்­லிம்கள் இலங்­கைக்கு வந்­தனர். அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டே திருப்பி அனுப்­பப்­பட்­டனர். ஆகவே இந்த காலத்தில் பெளத்த பிக்­கு­க­ளுக்கு உண்­மைகள் விளங்­க­வில்­லையா? அப்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆத­ர­வுடன் இவர்கள் பாது­காக்­கப்­பட்­டனர். 

அதனால் இந்த செயற்­பா­டுகள் எதையும்  எதிர்க்க எந்­த­வொரு தேர­ருக்கும் தைரியம் இருக்­க­வில்லை. இன்று ஒரு ­சி­லரின்  தூண்­டு­தலில் இன­வா­தத்தை பரப்பும் வகையில் குழப்­பங்­களை விளை­வித்து வரு­கின்­றனர். 

இங்கு தங்­கி­யுள்­ள­வர்கள்  ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் கட்­டுப்­பாட்டின் கீழ் அவர்­களின் பாது­காப்பில் உள்­ளனர். மாறாக இலங்கை அர­சாங்கம் எந்த உத­வி­க­ளையும் செய்­ய­வில்லை. ஆனால் அக­தி­க­ளாக வரு­வோரை நிரா­க­ரிக்க முடி­யாது. மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் உலகில் அனைத்து நாடு­களும் ஏற்­று­க்கொள்ள வேண்டும். 

இலங்­கையில் உள்ள 30  ரோஹிங்யா முஸ்­லிம்கள் குறித்து பெளத்த பிக்­குகள் கூச்சல் இடு­கின்­றனர். ஆனால் இலங்­கையில் இருந்து 20 இலட்சம் மக்கள் உலகில் அனைத்து நாடு­க­ளிலும் அக­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். யுத்த காலத்­திலும் அதற்கு முன்­ன­ராக முரண்­பாட்டுக் காலத்­திலும் நாட்டில் இருந்து அக­தி­க­ளாக வெளி­யே­றிய நபர்­களை ஐரோப்­பிய நாடுகள் அக­தி­க­ளாக ஏற்­றுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான சகல உத­வி­க­ளையும் வழங்கி வரு­கின்­ற­து. எமது நாட்டில் இருந்து அக­தி­களை வெளி­யேற்­றி­ய­வர்கள் தான் இன்று அக­திகள் குறித்து பேசு­கின்­றனர். 

நேற்று முன்­தினம்  இடம்­பெற்ற சம்­பவம் மிகவும் மோச­மான சம்­ப­வ­மாகும். அக­தி­க­ளாக உள்­ள­வர்­களை தாக்­கு­வதோ வெளி­யேற்­று­வதோ முழு­மை­யாக மனி­தா­பி­மானம் அற்ற செயற்­பா­டாகும். புத்த பெருமான் ஒரு­போதும் அவ­ரது போத­னையில் அடக்­கு­மு­றை­களை  போதிக்­க­வில்லை.  பெளத்த கொள்­கை­களை கடை­ப்பி­டிப்­ப­தாக  கூறும் ஒரு­சில பிக்­கு­களே இன்று மனி­தா­பி­மானம் இல்­லாத வகையில் நடந்து கொள்­கின்­றனர். இவர்கள் எவரும் பௌத்தம் பற்றி பேச எந்­த­வித தகு­தியும் இல்­லா­த­வர்கள். ஒருவர் வாழ வழி­யில்­லாது அக­தி­யாக இருக்கும் நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக அடக்­கு­மு­றை­களை கையாள மனி­தா­பி­மானம் இல்­லாத நபர்­களால் மட்­டுமே முடியும். இலங்­கையின் சட்­டத்­திற்கு அமைய அக­தி­யாக வரும் எந்­த­வொரு நபரையும் இலங்­கையின் பிர­ஜை­யாக்க அனு­மதி இல்லை. இலங்­கைக்கு சொந்தம் இல்­லாத எவ­ரையும் இலங்­கை­ய­ராக்க சட்டம் இல்­லாத போது எவ­ரையும் வலுக்­கட்­டா­ய­மாக தடுத்து வைக்க முடி­யாது. இவர்கள் தற்­கா­லி­க­மாக பாது­காப்பு முகாம்­களில் உள்­ளனர். இதனை தவ­றாக விளங்­கிக்­கொள்ள வேண்டாம். ஐக்­கிய நாடுகள் சபையின் பாது­காப்பில் இருந்து அவர்கள் மூல­மா­கவே திருப்பி அனுப்­பப்­ப­டு­வார்கள். இப்­போது அக­திகள் தொடர்பில் எவ்­வா­றான கொள்­கையை நாம் பின்பற்றி வருகின்றோமோ அதேபோன்றே  தொடர்ந்தும் செயற்படுவோம். அகதிகள் வரும் நிலையில் அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமை. எம்மாலான உதவிகளை நாம் செய்வதில் தவறில்லை. இது தவறான கொள்கையும் இல்லை. மியன்மாரில் பெளத்த முஸ்லிம் முரண்பாடுகள் இடம்பெற்று அங்கு மக்கள் பாதிக்கப்படுவது வருத்தத்திற்குரியது. ஆனால் அதை பயன்படுத்தி இலங்கையில் இனவாதத்தை கையில் எடுப்பது தவறானது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04