மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பிரபல போதை மருந்து விநியோகஸ்தரான ‘வெலே சுதா’ எனப்படும் கம்பொல விதானகே சமந்த குமார மற்றும் அவரது மனைவி மீதான பணச் சலவை மோசடி குறித்த விசாரணைகள் டிசம்பர் மாதம் நான்காம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றுக்கு இன்று (27) சிறை அதிகாரிகள் பாதுகாப்புடன் வெலே சுதா அழைத்து வரப்பட்டிருந்தார்.

சுமார் 190 மில்லியன் ரூபா கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் வெலே சுதா, அவரது மனைவி சுஜி என்ற கயனி பிரியதர்ஷினி உட்பட மூவர் மீது சட்டமா அதிபர் கடந்த 2006ஆம் ஆண்டு பணச் சலவைக்கு எதிரான சட்டத்தின் கீழ் 57 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்த வழக்குக் குறித்து வெலே சுதா சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதும், அதை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், வெலே சுதாவின் மனைவியின் சொத்துக்களைப் பராமரிக்க பாதுகாப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.