"நாமாவோம்" ; எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த சிறப்பு விவாதப் போட்டி....!

15 Jun, 2026 | 05:41 PM
image

அருகில் உள்ள தமிழ் பாடசாலைகளை ஒரே சங்கிலியின் கீழ் இணைத்து, கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு  முயற்சியாக சனிக்கிழமை (13) எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பு விவாதப் போட்டியொன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த விவாதப் போட்டியில் பாரதி தமிழ் மகா வித்தியாலயம் (எக்லாஸ்), பூனுகலை தமிழ் மகா வித்தியாலயம், கெளனி தமிழ் வித்தியாலயம் மற்றும் நாவலர் தமிழ் வித்தியாலயம் (பொலடகம), பனாவத்தை தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்க மாணவர்களை அனுப்பிவைத்து ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கி முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபருக்கும் பழைய மாணவர் சங்கம் விசேட நன்றிகளை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் பிரதான நோக்கம் பாடசாலைகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எட்டியனந்தோட்டையை சுற்றியுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளும்  ஒரு சங்கியிலின் கீழ் இணைந்து ஒரு சமூகமாக முன்னேறுவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.

குறுகியகால வெற்றிகளை மட்டுமல்லாது, நீண்டகால இலக்குகளையும் நோக்கங்களையும் அடைவதற்காக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே இதன்  எதிர்பார்ப்பாகும்.

அந்தப் பயணத்தின் ஒரு படியாக இன்றைய நிகழ்வு அமைந்திருக்கும் என உறுதியாக நம்புவதாக பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16
news-image

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா!

2026-06-30 16:19:16