எம்மில் சிலருக்கு சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போதும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் அத்தகைய தருணத்தில் உங்களுக்கு பாராதைரொய்ட் சுரப்பி வீக்க பாதிப்பிற்கான அறிகுறிகள் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பார்கள். இதற்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய குருதியில் பாராதைரொய்ட் சுரப்பி சுரக்கும் ஹோர்மோனின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும் போது ஏற்படும் பாதிப்பை ஹைப்பர்பாராதைரொய்டிசம் என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள். இந்த சுரப்பி எம்முடைய கழுத்துப் பகுதியின் கீழ் பகுதியில் அமைய பெற்றுள்ள தைரொய்ட் சுரப்பியின் பின்பகுதியில் ஒரு நெல்மணி அளவிற்கு பாராதைரொய்ட் சுரப்பிகள் உள்ளன. இவை எம்முடைய உடலில் கால்சியம் எனும் சத்தின் அளவு சீராக இருப்பதற்கு உதவுகிறது. நரம்புகளும் ,தசைகளும் சீராக இயங்குவதற்கு கால்சியம் அவசியம். அத்துடன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் இந்த கால்சியம் சத்து அவசியமாகிறது.
இந்நிலையில் இத்தகைய பாரா தைரொய்டா சுரப்பிகளின் சம சீரற்ற தன்மை காரணமாக அங்கு வீக்க பாதிப்பும், கட்டி பாதிப்பும் உண்டாகிறது. இதனை இயல்பான எண்ணிக்கையை விட கூடுதலாக கூடுதலான எண்ணிக்கையில் சிறுநீர் கழித்தல் , அடிக்கடி தாகம், எளிதில் சோர்வு , பலவீனம், எலும்பு மற்றும் மூட்டு வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, மலச்சிக்கல், சரும அரிப்பு, மனச்சோர்வு ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்தும். சிலருக்கு மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளில் எதுவும் பாதிப்பு தெரியவில்லை என்றாலும் ... வேறொரு தருணத்தில் மற்றொரு சிக்கலுக்காக குருதி பரிசோதனை மேற்கொள்ளும் போது கால்சியத்தின் அளவும்... இதன் பாதிப்பும் தெரியவரும்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் உங்களுக்கு குருதி பரிசோதனை, எலும்புகளின் ஆரோக்கியத்தை பரிசோதிக்கும் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை போன்ற பரிசோதனைகளுடன் பிரத்யேகமாக செஸ்டாமிபி பாராதைரொய்ட் ஸ்கேன் எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். இதன் அடிப்படையில் உங்களுடைய பாராதைரொய்ட் சுரப்பியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் தற்போது சிறிய அளவிலான மற்றும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள். அத்துடன் பாதிப்பின் தன்மையை பொருத்து மருந்தியல் சிகிச்சையையும் வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள்.
வைத்தியர் முஸ்தஃபா தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM