தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் - சென்னை'ஸ் தமிழ் டைட்டன்ஸ் எனும் பிக்கிள்பால் விளையாட்டு அணியின் உரிமையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் சென்னையில் தமிழ்நாடு அளவிலான தமிழ்நாடு பிக்கிள்பால் பிரிமியர் லீக் போட்டியின் சீசன் 2 நடைபெறுகிறது. இந்த பிரிமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கு 16 அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் சென்னை மாவட்டத்தின் சார்பில் விளையாடும் சென்னை'ஸ் தமிழ் டைட்டன்ஸ் எனும் அணியை நடிகை வரலட்சுமி சரத்குமார் வாங்கி, அதன் உரிமையாளராகி இருக்கிறார்.
இதன் மூலம் நடிகை வரலட்சுமி திரைத் துறையில் இருந்துகொண்டே ஏனைய முன்னணி நட்சத்திரங்களைப் போல் விளையாட்டு துறையில் முதலீடு செய்து தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை'ஸ் தமிழ் டைட்டன்ஸ் அணியின் சின்னத்தையும், பிரத்யேக சீருடையையும் நடிகை திரிஷா கிருஷ்ணன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வரலட்சுமிக்கும், அவரது அணியில் விளையாடும் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிக்கிள்பால் என்பது தற்போது இந்தியா மட்டுமின்றி பல சர்வதேச நாடுகளில் பிரபலமாகி வரும் உள்ளரங்க விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM