'ராஜா ராணி' தொலைகாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் சித்து சித் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'தி டார்க் ஹெவன்' எனும் க்ரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படம் - எதிர்வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தில் சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, சரண், வேல .ராமமூர்த்தி, ஜெயக்குமார், அருள் சங்கர், பிரதீப், சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பி கே மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எம் எஸ் சுவிஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே மலை கிராமத்தில் உள்ள மக்களிடத்தில் மரபு வழியாக பரவி இன்றும் அம்மக்களிடத்தில் செல்வாக்கு பெற்ற தொன்ம கதைகளை தழுவி, மர்மமான முறையில் நடைபெறும் தொடர் கொலைகளை அப்பகுதிக்கு புதிதாக பொறுப்பேற்கும் காவல்துறை அதிகாரி புலனாய்வு செய்து கொலையாளி யார்? என கண்டறியும் வகையில் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி இருப்பதால்.. இதற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM