பாலியல் குற்றச்சாட்டு நிரூபணமானது : நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Published By: Digital Desk 1

15 Jun, 2026 | 02:56 PM
image

பாலியல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட நோர்வே இளவரசி மெட்-மேரிட்டின் மகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான மாரியஸ் போக் ஹோய்பி என்பவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு எதிராக பாலியல் வல்லுறவு, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதிலும், அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகள் மாத்திரமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், விதிக்கப்பட்ட இந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இளவரசியின் மகனின் சட்டத்தரணிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2024ஆம் ஆண்டில் மாரியஸ் போக் ஹோய்பி கைது செய்யப்பட்டிருந்ததோடு, இந்தச் சம்பவம் நோர்வே அரச குடும்பத்தின் மக்கள் செல்வாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனக்கு எனது ஜனம்தான் முக்கியம் -...

2026-07-10 18:24:13
news-image

மீள்பயன்பாட்டு ரொக்கெட் தொழில்நுட்பத்தில் சீனா வரலாற்று...

2026-07-10 16:48:53
news-image

ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய...

2026-07-10 13:05:16
news-image

ஸ்பெயினில் காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு,...

2026-07-10 10:32:12
news-image

சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ...

2026-07-10 09:20:36
news-image

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம்...

2026-07-09 16:22:55
news-image

ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட...

2026-07-09 15:11:53
news-image

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா...

2026-07-09 13:48:56
news-image

அமெரிக்காவுக்குள் பரவி வரும் கம்யூனிஸமே நாட்டின்...

2026-07-09 13:48:17
news-image

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசும்...

2026-07-09 11:03:47
news-image

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்;...

2026-07-09 09:58:48
news-image

ChatGPT மூலம் கார்ட்டூன் தளத்தின் 46,000...

2026-07-09 09:42:39