நெதர்லாந்துடனான பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

15 Jun, 2026 | 01:10 PM
image

(நெவில் அன்தனி)

டலாஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான எவ் குழு பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் ஜப்பான் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

போட்டி முழுவதும் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய  இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கூறமுடியாத அளவுக்கு கடும் போட்டித்தன்மை நிலவியது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

நெதர்லாந்து வீரர் வேர்ஜில் வன் டிக் 50ஆவது நிமிடத்தில் கோல் போட அடுத்த 7ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கீட்டோ நக்காமுரா கோல்நிலையை சமப்படுத்தினார்.

எனினும் 64ஆவது நிமிடத்தில் க்ரைசென்சியோ சமவில் கோல் போட்டு நெதர்லாந்தை 2 - 1 என முன்னிலையில் இட்டார்.

எவ்வாறாயினும் போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருந்தபோது ஜப்பான் சார்பாக டெய்ச்சி கமாடா கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் வெற்றி கோலை போட எடுத்த முயற்சி கைகூடவில்லை.

சுவீடனுக்கு இலகுவான வெற்றி

மொன்டெரி விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் சுவீடன் 5 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் டியூனிசியாவை வெற்றிகொண்டது.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. இடைவேளையின்போது சுவீடன் 2 - 1 என முன்னிலையில் இருந்தது.

ஆனால், இடைவேளைக்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய சுவீடன் மேலும் 3 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

சுவீடன் சார்பாக யாசின் அயாரி (7 நி., 90+6 நி.), அலெக்ஸாண்டார் ஐசாக் (30 நி.), விக்டர் கியோக்கர்ஸ் (59 நி.), மெத்தாயஸ் ஸ்வன்பேர்க் (84 நி.) ஆகியோரும் டியூனிசியா சார்பாக ஓமார் ரெக்கிக் (43 நி.) என்பவரும் கோல்களைப் போட்டனர்.

மாற்றுவீரர் டியல்லோ போட்ட கோல்

ஐவரி கோஸ்டை வெற்றிபெறச் செய்தது

ஃபிலடெல்ஃபியா விளையாட்டரங்கில் ஐவரி கோஸ்ட் அணிக்கும் ஈக்வடோர் அணிக்கும் இடையில் ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஈ குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியில் கடைசி நேரத்தில் போடப்பட்ட  கோல் ஐவரி கோஸ்டை 1 - 0 என வெற்றிபெறச் செய்தது.

போட்டியின் 56ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அமாத் டியல்லோ 90ஆவது நிமிடத்தில் போட்ட கோல் ஐவரி கோஸ்டின் வெற்றிகோலாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12