குர்ஆன் வகுப்பில் கலந்துகொண்ட பத்து வயதுச் சிறுமியுடன் தகாத முறையில் நடந்துகொண்ட இமாம் ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை, பெருங்குளத்தூர் பகுதியில் உள்ள குண்டுமேடு பள்ளிவாசல் இமாம் அஹமட் சுல்தான் (40). அவரிடம் சில பிள்ளைகள் குர்ஆன் கற்று வந்துள்ளனர்.

அதில் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியை, நன்றாகப் படிக்கவில்லை என்று கூறி, வகுப்பு முடிந்த பின்னரும் இருந்து படித்துச் செல்லுமாறு இமாம் கூறியுள்ளார்.

அதன்படி வகுப்பின் பின்னரும் தங்கியிருந்த அச்சிறுமியிடம் தகாத முறையில் இமாம் நடந்துகொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடளித்தனர்.

அதன்பேரில், பொலிஸார் இமாமைக் கைது செய்ததுடன் அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

விசாரணையின்போது, குறித்த சிறுமி குர்ஆன் வகுப்புகளுக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டே பொய் கூறியதாக இமாம் கூறினார். விசாரணை தொடர்கிறது.