கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரைப் பகுதியை பொழுது போக்கும் கடற்கரைப் பகுதியாக அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைப்பெற்ற போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் மேலதிக புகையிரத வீதியினை நிர்மானிப்பதற்கான இடவசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இத் திட்டத்தின் மூலம் கடலரிப்பினை குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.