(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட மாகாணசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் 2 ஆம் பிரிவின் வடிவமானது. உயர்நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட உரை வடிவ மொழியானது வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போவதாக அமைகிறது.சட்டமூலத்தின் உள்ளடக்கமானது உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விசேட தீர்மானத்துக்கு முரணானதல்லவென சட்டமா அதிபர் திணைக்களம் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த தனிநபர் பிரேரணையை சட்டமாக்குவது முன்னர் நடைமுறையில் இருந்த அதாவது 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த வழிவகுக்கும்.ஆனால் அதில் பெண் பிரதிநிதித்துவத்துக்கான ஏற்பாடுகள் இருக்காது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என ஆராய்ந்து விதப்புரை மற்றும் யோசனைகளை முன்வைக்கும் பாராளுமன்ற விசேட செயற்குழு கடந்த புதன்கிழமை அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் கூடியது.
மாகாணசபைத் தேர்தல் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆராய்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் விதிகள், 2017 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் எந்தவொரு ஏற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்தலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட மாகாணசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் 2 ஆம் பிரிவின் வடிவமானது. உயர்நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட உரை வடிவ மொழியானது வார்த்தைக்கு வார்த்தை ஒத்துப்போவதாக அமைகிறது.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் உள்ளடக்கமானது உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விசேட தீர்மானத்துக்கு முரணானதல்ல என்பதை குழுவுக்கு அறிவுறுத்துகிறோம்.
இந்த தனிநபர் பிரேரணையை சட்டமாக்குவது முன்னர் நடைமுறையில் இருந்த அதாவது 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்த வழிவகுக்கும்.ஆனால் அதில் பெண் பிரதிநிதித்துவத்துக்கான ஏற்பாடுகள் இருக்காது.
ஏனெனில் அத்தகைய சாதகமான அம்சம் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 52(6) மற்றும் 57 (7) இன் பிரகாரம் குறித்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்ட பின்னரே அதன் விதிகளை ஆராய்ந்து அரசியலமைப்பின் 77 (1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் அதன் சட்டமா அதிபரால் சான்றழிக்க முடியும். ஆகவே இந்த அறிவிப்பில் உள்ளடக்கங்களை அரசியலமைப்பு இணக்கப்பாட்டுக்காக ஒரு ஆவணமாக கருதக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM