டெங்கு உட்பட வைரஸ் நோய்த்தாக்கங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளாந்தம் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் வீதமும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர,
நேற்று (13) சனிக்கிழமை வரை 41,144 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 51 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர். முன்னதாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 750 வரை உயர்ந்திருந்தது. இன்றையதினம் அது 630 ஆகக் குறைவடைந்துள்ள போதிலும், அது இன்னமும் மிக உயர்வான மட்டமாகவே காணப்படுகின்றது.
அத்துடன், டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளினால் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வார்டுகளில் பெருமளவிலான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலைமை மேலும் அதிகரித்தால் அது ஆபத்தானதாக மாறக்கூடும். அத்துடன் எமது சுகாதாரக் கட்டமைப்பால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலையும் ஏற்படலாம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM