பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

15 Jun, 2026 | 09:40 AM
image

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்ட வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய வகையில் அர­சாங்கம் பொறுப்புக் கூறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

அதே­போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ரணை உரிய வகையில் நடத்­தப்­பட்டு, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்று குற்றம் சாட்­டப்­பட்டு வந்­தது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம்­பெற்­றி­ருந்த போதிலும் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் அந்தத் தாக்­குதல் குறித்த விசா­ர­ணை­களை உரிய வகையில் நடத்­த­வில்லை என்று கத்­தோ­லிக்க ஆயர் மன்றம் குற்­றம்­சாட்டி வந்­தது.

ஆனால், தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணையில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இந்தத் தாக்­குதல் தொடர்பில் அர­சாங்­கத்தின் புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு அவர் மீது விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதே­போன்றே இந்தத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ, முன்னாள் இரா­ணுவ உள­வுத்­துறை அதி­கா­ரி­க­ளான பிரே­மா­னந்த உடலா­கம, ரிஷாந் டி ரொஷான் அன்சார் ஆகி­யோ­ருக்கு எதி­ராக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரின் கோரிக்­கைக்கு இணங்க வெளி­நாட்டு பயணத் தடை விதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள சுரேஷ் சலே, விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைக்­க­வில்லை என்று பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஆனந்த விஜே­பால தற்­போது குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் இந்த விடயம் தொடர்பில் கடந்த புதன்­கி­ழமை கருத்து தெரி­வித்த அமைச்சர் ஆனந்த விஜே­பால, சுரேஷ் சலே தொடர்பில் பல்­வேறு விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் சுரேஷ் சலே நேர­டி­யாக தொடர்பு கொண்­டுள்­ள­துடன் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யுள்ளார். இந்த விட­யங்கள் அனைத்தும் விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்­துக்கு மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் சுரேஷ் சலே 5 பேரை நீர்­கொ­ழும்பு  பகு­திக்கு அனுப்பி கத்­தோ­லிக்க தேவா­ல­யங்கள் மற்றும் விசேட வழி­பாட்டில் கலந்­து­கொள்­ப­வர்­களின் எண்­ணிக்கை உள்­ளிட்ட தக­வல்­களை திரட்­டி­யுள்­ள­தா­கவும் சுரேஷ் சலே தனது கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் மடிக் கணினி போன்­ற­வற்றின் கடவுச் சொற்­களை வெளிப்­ப­டுத்த மறுத்து வரு­வ­தா­கவும் விசா­ர­ணைக்கு அவர் ஒத்­து­ழைக்­க­வில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜே­பால,  குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஏதோ­வொரு வகையில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதனை பறை­சாற்றும் வகை­யி­லேயே சுரேஷ் சலே விவ­கா­ர­மா­னது சிங்­கள பெளத்த தேசி­ய­வாத சக்­தி­க­ளினால் தற்­போது பூதா­க­ர­மாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் தங்­கு­ த­டை­யின்றி தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­படும் என்றும் அர­சாங்கம் உறுதி வழங்­கி­யி­ருக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி தன்னை கைது செய்­வ­தனை தடுக்­கு­மாறு கோரி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜய­சுந்­த­ரவும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ரீட் மனு­வொன்­றினை கடந்த புதன்­கி­ழமை தாக்கல் செய்­தி­ருக்­கின்றார். விசா­ர­ணையின் போது தானும் கைது செய்­யப்­படக் கூடும் என்ற சந்­தே­கத்­தி­லேயே அவர் இத்­த­கைய மனுவை தாக்கல் செய்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

உண்­மை­யி­லேயே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­த­க­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டாகும். அந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விரைந்து நீதி வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் முன்­வர வேண்டும்.

இந்த விட­யத்தில் பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்டை தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதில் தொடர்ச்­சி­யான முன்­னேற்­றங்கள் காணப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதே­போன்றே இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பிலும் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு 17 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இன்­னமும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி­ வ­ழங்­கப்­ப­ட­வில்லை. அந்த பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்­டி­லி­ருந்து தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் விலகி நிற்­ப­தா­கவே தெரி­கின்­றது.

இறுதி யுத்தக் காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் காணா­ம­லாக்­கப்­பட்­டனர். கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் தமிழ் இளைஞர், யுவ­திகள் கடத்­தப்­பட்­டனர், காணா­ம­லாக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.

கொழும்பில் 5 மாண­வர்கள் உட்­பட 11 தமி­ழர்கள் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டனர். இறுதி யுத்தக் காலத்தில் நடை­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இந்த விசா­ர­ணையின் போது திரு­கோ­ண­ம­லையில் கடற்­ப­டை­யி­னரால் வதை­முகாம் நடத்திச் செல்­லப்­பட்­டமை தொடர்­பிலும் அங்கு பலர் கொல்­லப்­பட்­டமை குறித்தும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்த சம்­ப­வத்­துடன் கடற்­ப­டையின் முன்னாள் தள­பதி வசந்த கரன்னாகொட உட்­பட 14 கடற்­ப­டை­யினர்  மீது மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் கடற்­ப­டையின் முன்னாள் தள­பதி வசந்த கரன்னாகொட  தாக்கல் செய்த மனு­வை­ய­டுத்து இந்த விசா­ரணை இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது உயர் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய அந்த விசா­ரணை மீளவும் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த வழக்கில் கடற்­படை முன்னாள் தள­பதி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்­தன தற்­போது பிர­தி­வா­தி­யாக இணைக்­கப்­பட்­டுள்ளார். அதற்­க­மைய ஜூலை மாதம் 27ஆம் திகதி அவரை நீதி­மன்றில் முன்­னி­லை­யா­கு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்­தினால் அழைப்­பானை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் இந்த 5 மாணவர் உட்­பட 11 தமி­ழர்கள் கடத்­தப்­பட்ட விசா­ரணை துரி­த­க­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், ஆட்சி மாற்­றத்­துக்கு பின்னர் அந்த விட­யத்தில் இழு­பறி நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனாலும் தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது இந்த வழக்கு விசா­ர­ணையை மீளவும் ஆரம்­பித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது.

இவ்­வாறு இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­க­ளையும் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­வர வேண்டும். காணாமல் போனோர் விவ­கா­ரத்­திலும் இத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

காணா­மல்­போ­னோரின் பெரு­ம­ள­வானோர் உற­வி­னர்­களால் படைத் தரப்­பி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் படைத் தரப்­பி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்­க­ளா­க­வுமே காணப்­ப­டு­கின்­றனர். எங்கு, எப்­போது காணாமல் போகும் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன என்­பதை விசா­ரிப்­பதன் மூலம் அதற்கு கார­ண­மா­ன­வர்­களை கண்­ட­றிய முடியும்.

இதே­போன்­றுதான் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் விசா­ர­ணை­களை முன்னெடுத்து நீதியை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பொறுப்புக் கூறும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதை போன்று இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்றது. அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களை யார் எந்தவகையில் செய்திருந்தாலும் அத்தகையவர்கள் தகுதி, தராதரம் பாராது நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13
news-image

பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர் முன்னேற்றம் அவசியம்

2026-06-15 09:40:38
news-image

அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக்...

2026-06-07 14:13:43
news-image

மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பெரும்...

2026-05-31 12:51:21
news-image

ஜனாதிபதி அநுரவின் கூற்றும் நல்லிணக்கத்தின் அவசியமும்

2026-05-24 11:14:47
news-image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பொறுப்புக்கூறலின் அவசியமும்

2026-05-17 13:57:47
news-image

ஜனாதிபதிக்கான கம்பன் விருதும் தமிழ் மக்களின்...

2026-05-10 15:14:37
news-image

இந்திய துணை ஜனாதிபதியின் ஒற்றுமைக்கான அழைப்பு

2026-04-26 10:45:41