(நெவில் அன்தனி)
ஜெமெய்க்கா, கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நமது நாட்டு நேரப்படி இன்று காலை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 37 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
காமில் மிஷார, தசுன் ஷானக்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இலங்கை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.
முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றனர்.
இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமையவில்லை.
இலங்கை 13ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
இந் நிலையில் காமில் மிஷார, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

காமில் மிஷார ஆட்டம் இழக்காமல் 61 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 24 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 31 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷமர் ஜோசப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ போர்ட் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
195 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரோவ்மன் பவல் 43 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: தசுன் ஷானக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM