தொலைபேசி கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 1

14 Jun, 2026 | 11:30 AM
image

ராகம  பகுதியில் உள்ள தொலைபேசி  கோபுர கேபிள்களை வெட்டி திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்ப்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய அதிகாரிகள் குழுவினால் சனிக்கிழமை (13) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது நடவடிக்கையின் குறித்த நபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்  அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

 கைதான நபர்கள் சுமார் 922,750 ரூபா பெறுமதியான தொலைபேசி கோபுர கேபிள்களை வெட்டி திருடியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், திருடப்பட்ட பெருமளவிலான கேபிள் துண்டுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை, மொரட்டுவை பகுதியில்  தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடியமை மற்றும் பல்வேறு வீடடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை (13) பிற்பகல் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொரட்டுவை பகுதியில் சுமார் 180,000 ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடியுள்ளமை மற்றும் பல வீடுகளினுள் புகுந்து  பெறுமதியான சொத்துக்களையும் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பெருமளவிலான செப்பு கம்பிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான நபர்  ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-20 12:46:50
news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46